×

₹65 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், பிப்.14: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 450 மாடுகள் 500ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ₹30லட்சத்திற்கு மாடுகளும், ₹32 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ₹3லட்சத்திற்கு விற்பனையானது. இதில் மொத்தம் ₹65லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

The post ₹65 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Dinakaran ,
× RELATED கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்